நடிகை கீர்த்தி பாண்டியன், 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண்பாண்டியனின் மகள் ஆவர்.
இவர் தனது தந்தையுடன் இணைந்து நடித்த 'அன்பிற்கினியாள்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சர்ச்சையான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில், கீர்த்தி பாண்டியன் தற்போது கதாநாயகியாக 'கண்ணகி' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதில், கீர்த்தி பாண்டியன் தொப்புள் கொடியிலிருந்து கயிறு வருவது போலவும், கயிற்றின் மறுமுனையில் மற்றொரு நபர் தீ வைப்பது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் இயக்குநர் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை.
இப்படத்தின் போஸ்டரை பார்த்த இணையவாசிகள், கண்ணகியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்குமோ என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த போஸ்டருக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஃபேஷன் குயின் சதா புகைப்படங்கள்