கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் புனித் ராஜ்குமார். இவர் பழம் பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இன்று (அக்.29) காலை புனித் ராஜ்குமார் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இசிஜி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். புனித் ராஜ்குமாரின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்தச் செய்தியும் வெளியிடவில்லை.
புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அறிந்த ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெறறு வரும் நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திரையுலகினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரஜினிகாந்த்துக்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு: வெளியான தகவல்