பாலிவுட்டில் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் ஃபேஷன், குயின் , மணிகர்ணிகா என்று வித்தியாசமான கதாபாத்திரங்கள் கொண்ட படத்தில் நடித்துவருகிறார்.
அதுமட்டுமல்லாது தனது மனதில் உள்ள கருத்துகளை அப்படியே வெளியில் கூறும் போல்டு அன்ட் பியூட்டி நடிகையும்கூட. சமீபத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான சப்பாக் படத்தில் நடித்தற்காக தீபிகாவை பாராட்டினார். கங்கனா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'பங்கா' இதில் கபடி வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தை அஸ்வின் ஐயர் திவாரி இயக்கியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பாட்னா சென்ற அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர், பீகாருக்கு நான் இரண்டாவது முறையாக வருகிறேன். முதல் தடவை நான் வரும்போது குழந்தையாக இருந்தேன். எனது யோகா ஆசிரியர் மூலம் எனக்கும் பீகாருக்குமான தொடர்பு இருக்கிறது என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், மணிகர்ணிகா ஜான்சி ராணி, லட்சுமி பாய் போன்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. அதுவும் குறிப்பாக இந்திய வரலாற்றில் முக்கிய இடம் வகித்த சந்திரகுப்த மெளரியர் குறித்து படம் எடுக்கவும் அதில் நடிக்கவும் ஆர்வம் இருப்பதாக கூறினார்.
இதையும் வாசிங்க: இந்திக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கிறேன்? கங்கனா ரணாவத் விளக்கம்