ETV Bharat / sitara

'நான் வசிக்கும் வீடு சரத் பவாருக்குச் சொந்தமானது' - கங்கனா ரணாவத் - Pawar

மும்பை: தான் வசிக்கும் கட்டடம் சரத் பவாருக்குச் சொந்தமானது என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

gangana
gangana
author img

By

Published : Sep 11, 2020, 12:57 PM IST

நடிகர் சுஷாந்த் தற்கொலை குறித்து கருத்துத் தெரிவித்து வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மும்பை நகரத்தையும், மகாராஷ்டிரா மாநிலத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். மும்பை குட்டி பாகிஸ்தான் என்று கூறிய கங்கனா ரணாவத் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும்; இல்லையென்றால் அவர் மும்பை நகரத்திற்கு வரக்கூடாது எனவும் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

இதனால், கங்கனா ரணாவத்திற்கும் சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ராவத்துக்கும் ட்விட்டரில் சண்டை மூண்டது. இதனைத்தொடர்ந்து கங்கனா ரணாவத்திற்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர்கள், மும்பை நகரத்தை விமர்சித்த நபருக்கு பாஜக அரசு பாதுகாப்பு அளிக்கிறது என்றனர்.

இந்த வாக்குவாதம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மும்பை பந்த்ரா பகுதியில் பலி ஹில் இடத்தில் உள்ள கங்கனா ரணாவத் வீட்டை ஆய்வு செய்த குழுவினர், விதிகளை மீறி ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றியுள்ளதாக நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தனர். இந்நிலையில், மும்பை மாநகராட்சி ஊழியர்கள் வீட்டின் ஒரு பகுதியை அலுவலர்கள் முன்பு இடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நடிகை கங்கனா மும்பை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை வருகின்ற 22ஆம் தேதிக்கு மாற்றியது.

இதுகுறித்து கங்கனா தனது ட்விட்டரில் கூறியதாவது, "இது எனது பிளாட் பிரச்னை அல்ல. இந்தப் பிளாட்டிற்கு சொந்தமானவர் தான் சமாளிக்க வேண்டும். இந்த கட்டடம் சரத் பவாருக்குச் சொந்தமானது. இதனை அவரது நண்பரிடமிருந்து வாங்கினோம். ஆனால், இதுவரை இதுகுறித்து அவர் என்னிடம் பதிலளிக்கவில்லை.

கங்கனா ரனாவத் ட்வீட்
கங்கனா ரணாவத் ட்வீட்

கடந்த 2018ஆம் ஆண்டே மும்பை மாநகராட்சி நான் வசிக்கும் டி.பி. ப்ரீஸ் கட்டடத்தில் உள்ள பிளாட்டிற்கு தான் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பலி ஹில்லில் உள்ள அவரது பங்களாவிற்கு அல்ல. இதில் சட்டவிரோத கட்டுமானப் பகுதியென மும்பை மாநகராட்சி இடித்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாதுகாப்பாக இருக்கக்கூறிய சல்மான் கான், கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.