ETV Bharat / sitara

ராமநாதசுவாமி தரிசனம்செய்த கங்கனா ரணாவத்

author img

By

Published : Feb 23, 2020, 9:52 PM IST

ராமநாதபுரம்: நடிகை கங்கனா ரணாவத் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார்.

இராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் கங்கனா ரணாவத்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துவருகிறார். தலைவி என்று பெயரிட்டுள்ள இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கிவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் நடிகை கங்கனா, கடந்த 21ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயம்புத்தூர் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்குச் சென்றார்.

இதையடுத்து இன்று அதிகாலை ராமேஸ்வரத்தில் உள்ள, ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று ஜோதிர்லிங்க சிவனை வழிபட்டார். மேலும் ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவிடத்திற்குச் சென்று கங்கனா மரியாதை செலுத்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'திரும்ப வந்துட்டேன்' - பழைய பார்முக்கு திரும்பிய சிம்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.