சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்டகாலப் பொதுச்செயலாளராக இருந்தவரும், மறைந்து முதலமைச்சருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'தலைவி'.
ஏ.எல். விஜய் இயக்கத்தியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில், கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதேபோல் திரையரங்குகளில் படம் வெளியான இரண்டு வாரத்தில் ஓடிடி தளங்களில் வெளியிடவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் தயாரிப்பாளர்கள் படத்தை நான்கு வாரம் கழித்தே வெளியிட முடியும் என நிபந்தனை விதித்தனர்.
இதற்குப் படக்குழுவினர் சம்மதம் தெரிவித்த நிலையில், தலைவி வரும் 10ஆம் தேதி திரைக்கு வரத் தயாராகிவருகிறது. இந்நிலையில் தலைவி படக்குழு, படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்கு படத்தின் 'தலைவி' கங்கனா ரனாவத், படக்குழுவினர் ஆகியோர் சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் கருணாநிதியின் நினைவிடத்திலும் கங்கனா ரனாவத் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: தீர்ந்தது சிக்கல்; திட்டமிட்டபடி வருகிறார் தலைவி!