ETV Bharat / sitara

கமல்ஹாசன் உடல்நிலை - மருத்துவமனை அறிக்கை - அண்மை சினிமா செய்திகள்

கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் உடல்நிலை தேறி வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/26-November-2021/13742481_kamal1.jpg

author img

By

Published : Nov 26, 2021, 4:09 PM IST

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார். பின்னர் சென்னை திரும்பிய அவர், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கமல்ஹாசன் சுவாசப் பாதை தொற்று, காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முன்னர் அறிக்கை வெளியிடப்பட்டது.

மருத்துவமனை அறிக்கை
மருத்துவமனை அறிக்கை

பின்னர் நடிகர் கமல்ஹாசன் விரைவில் குணமடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று (நவ. 26) அறிக்கை வெளியிட்டது. அதில், “ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் உடல்நிலை தேறி வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஷூட்டிங்கில் கயல் சீரியல் நாயகிக்கு காயம்.... கவலையில் ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.