நடிகைகள் கஜோல், ஷ்ருதி ஹாசன், நேகா துபியா, நீனா குல்கர்னி, முக்தா பார்வே, சந்தியா மெத்ரே, ரமா ஜோஷி, யஷஸ்வினி தயமா, ஷிவானி ரகுவன்ஷி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள குறும்படம் 'தேவி'.
சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஒன்பது பெண்களின் வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படம் திங்கள்கிழமை (மார்ச் 2) இணையத்தில் வெளியானது. பெண் இயக்குநர் பிரியங்கா பானர்ஜி எழுதி, இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ‘தேவி’ குறும்படம் தன்னுடையது என்று மும்பையைச் சேர்ந்த அபிஷேக் ராய் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ”நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நான் திரைப்பட பள்ளியில், படித்தபோது என் குழுவுடன் சேர்ந்து ஆண்டாகுரி புரொடக்ஷன் தயாரிப்பில் ‘FOUR' என்ற குறும்படத்தை இயக்கி 2019ஆம் ஆண்டு வெளியிட்டோம்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
என்னுடைய கதை போல் இருக்கும் 'தேவி' குறும்படத்தை சமீபத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். என் கதையை திருடி எடுத்துவிட்டு ’தேவி’ தயாரிப்பாளர்கள் தங்களுடைய படைப்பு என்று கூறுவது இரக்கமற்றது. எங்களுடைய குறும்படம் மிகக் குறைந்த தயாரிப்பு சார்பில், மோசமான ஆடியோ மற்றும் பொருட்களைக் கொண்டு தயாரானது. இருப்பினும் இது எங்களின் கதை, அடுத்தவரின் சிந்தனையை எடுத்துக்கொண்டு, எப்படி ஒருவர் தங்களுடைய கதை என்று கூற முடியும்?
இது தொடர்பாக, ‘தேவி’ குறும்படத் தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆறு வயதில் நிகழ்ந்த அக்கிரமம் - 'பிக் பாஸ்' பிரபலத்தின் ஷாக் ப்ளாஷ்பேக்