தமிழில் பரத் நடிப்பில் வெளியான 'பழனி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், நடிகை காஜல் அகர்வால். அதன்பின், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகர்களின் படத்தில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார். இவர் தற்போது கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தில் நடித்துவருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் மும்பை தொழிலதிபரான கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் கணவருடன் தேனிலவுக்கு சென்ற காஜல் அகர்வால் அதன்பின் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான 'லைவ் டெலிகாஸ்ட்' வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
-
My absolute favourite Shanti mess in Pollachi. That’s Shanti akka and Balakumar anna,serving us with utmost love.That’s the reason why their food has consistently been delicious since the past 27years and I’ve been going to their adorable little outlet since 9 years! @kitchlug ❤️ pic.twitter.com/9eJesMI926
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My absolute favourite Shanti mess in Pollachi. That’s Shanti akka and Balakumar anna,serving us with utmost love.That’s the reason why their food has consistently been delicious since the past 27years and I’ve been going to their adorable little outlet since 9 years! @kitchlug ❤️ pic.twitter.com/9eJesMI926
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) February 14, 2021My absolute favourite Shanti mess in Pollachi. That’s Shanti akka and Balakumar anna,serving us with utmost love.That’s the reason why their food has consistently been delicious since the past 27years and I’ve been going to their adorable little outlet since 9 years! @kitchlug ❤️ pic.twitter.com/9eJesMI926
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) February 14, 2021
இந்நிலையில், பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு காஜல் அகர்வால் தனது கணவருடன் பொள்ளாச்சியில் உள்ள சிறிய உணவகமான சாந்தி மெஸ்ஸில் உணவத்துக்கு வருகை திருந்தார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு மிகவும் பிடித்த பொள்ளாச்சி சாந்தி மெஸ்ஸில் சாந்தி அக்காவும் பாலகுமார் அண்ணனும் உணவோடு சேர்ந்து அன்பையும் மிக அதிமாக பரிமாறினார்கள். அதனால்தான் இந்த மெஸ் ஆரம்பித்த 27ஆண்டுகளாக இங்கு உணவு சுவையாக இருக்கிறது. நான் இந்த உணவகத்துக்கு 9 ஆண்டுகளாக வந்து செல்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.