ETV Bharat / sitara

விடுதலைக்கு தயாரான 'கைதி'...தேதி என்ன?

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் 'கைதி' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

kaithi
author img

By

Published : Aug 25, 2019, 6:41 PM IST

'மாநகரம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி' என்னும் புதிய படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் கார்த்தி ஜோடியாக கதாநாயகிகள் யாரும் இல்லை. இப்படம் முழுவதும் ஒரு நாள் இரவில் சிறையில் இருந்து தப்பிக்கும் கைதியைப் பற்றிய கதை என்று கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்தியுடன் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், படக்குழு 'கைதி' ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அக்டோபர் மாதம் வெளியீடு என்று அறிவித்துள்ளனர். ஆனால் படம் வெளியாகும் தேதி பற்றிய தகவல் அதில் தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே இந்த வருட தீபாவளிக்கு விஜய்யின் 'பிகில்', விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' ரேஸில் இருக்கிறது. தற்போது 'கைதி' அக்டோபர் வெளியீடு என்று தேதி குறிப்பிடாமல் வெளியானது தீபாவளி ரேஸில் இணைவதற்கா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.