விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா எனத் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமான்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார்.
அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஹிட்டாகின. இந்நிலையில் இப்படத்தின் டீசர் யூ-ட்யூபில் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்திற்கு எஸ்.ஆர். கதிர், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: ஆர்யாவின் 'கேப்டன்' படப்பிடிப்பு நிறைவு