கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'காப்பான்'. மிகப்பெரிய பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மோகன் லால், ஆர்யா, சாயிஷா சைகல் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் மோகன் லால் பிரதமராகவும், சூர்யா பாதுகாப்பு அளிக்கும் வீரராகவும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்றது. சிறுக்கி என்ற பாடலும் பட்டி தொட்டியெங்கு கலக்கி வருகிறது.
![காப்பான் ஆடியோ லாஞ்ச்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3906785_kappa.jpg)
இந்நிலையில் காப்பான் படத்தின் இசைவெளியீட்டு விழா, திருவான்மியூரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். ரசிகர்களுக்கு வணக்கம் சொல்லியபடி அரங்கிற்குள் ரஜினிகாந்த் வரும்போது, அவரை கரகோசத்துடன் சூர்யாவின் ரசிகர்கள் வரவேற்றனர். ரஜினிகாந்த் அருகில் சூர்யா அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
![ரஜினி -சூர்யா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3906785_surya.jpg)
இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் சூர்யாவை பாராட்டி பேசிய ரஜினிகாந்த், சூர்யாவிற்காக காப்பான் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தது, கோலிவுட் வட்டாரத்தை வியக்க வைத்துள்ளது.