நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நான்கு படங்களைத் தயாரித்துள்ளார். அதில் 'கத்துக்குட்டி' படத்தை இயக்கிய இரா.சரவணனின் 'உடன்பிறப்பே' படமும் ஒன்று.
சசிகுமார், ஜோதிகா நடித்துள்ள இப்படம் உறவுகளின் இடையே உள்ள சிக்கல்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'உடன்பிறப்பே' திரைப்படத்தில் சசிகுமார், ஜோதிகாவுடன் சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உணர்ச்சிபூர்வமான சக்திவாய்ந்த கதையில் குடும்ப உறவுகளால் வலுவாக பின்னப்பட்டிருக்கும் உடன்பிறப்பே சகோதரப்பாசம், காதல், செண்டிமென்ட் கலந்த கதையம்சத்தை கொண்டுள்ளது.
மேலும் 'உடன்பிறப்பே' திரைப்படம் ஜோதிகாவின் 50ஆவது படமாகும். தற்போது இப்படம் அமேசான் ப்ரைமில் அக்டோபர் 14ஆம் தேதி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: ’உடன்பிறப்பே’ இயக்குநருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!