1993ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜூராசிக் பார்க்'. இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூராசிக் பெயர் கொண்டு நிறைய படங்கள் வெளியாகின. 2018 ஆம் ஆண்டு இயக்குநர் பாயனோ இயக்கத்தில் வெளியான 'ஜூராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்' என்ற படம் கடைசியாக வெளியாகியிருந்து.
தற்போது இயக்குநர் கொலின் ட்ரெவாரோ இயக்கத்தில் உருவாகி வரும் புதிய ஜூராசிக் படத்திற்கு பெயர் வெளியாகியுள்ளது. அதன் படி 'ஜூராசிக் வேர்ல்ட்: டொமினியன்' என்று பெயர் வைத்துள்ளனர். இதனை இயக்குநர் கொலின் ட்ரெவாரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். உதவி இயக்குநர் ஒருவர் பிடித்திருக்கும் கிளாப் போர்டில் படத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது. இப்படம் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Day One#JurassicWorld pic.twitter.com/UnQIUFwJ3t
— Colin Trevorrow (@colintrevorrow) February 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Day One#JurassicWorld pic.twitter.com/UnQIUFwJ3t
— Colin Trevorrow (@colintrevorrow) February 25, 2020Day One#JurassicWorld pic.twitter.com/UnQIUFwJ3t
— Colin Trevorrow (@colintrevorrow) February 25, 2020
2018ஆம் ஆண்டு வெளியான 'ஜூராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம்' படத்தில் டைனோசர்கள் சிறையிலிருந்து தப்பித்து வெளியுலகில் உலவுவது போன்று படம் முடிக்கப்பட்டது. தற்போது இப்படம் அதன் தொடர்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஜூராசிக் வேர்ல்ட்', 'ஜூராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்' படத்தில் நடித்த கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் ஆகியோர் 'டொமினியன்' படத்திலும் நடிக்கின்றனர். அதே போன்று 'ஜூராசிக் பார்க்', 'ஜூராசிக் பார்க் 3', 'ஜூராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம்' ஆகிய படங்களில் நடித்த லாரா டெர்ன், ஜெஃப் கோல்ட்ப்ளம், சாம் நீல் ஆகியோர் மீண்டும் இதில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் வாசிங்க: பிரமாண்ட படங்கள் கொடுத்த தந்தை... அந்த மாதிரி படங்கள் கொடுக்க விரும்பு மகள்!