சென்னை : சரவணா பவன் உணவகத்தின் உரிமையாளர் ராஜகோபால். இவர் தனது உணவக மேலாளர் மகள் ஜீவஜோதி என்பவரின் கணவர் சாந்தகுமாரை ஆள்களை வைத்து கொலை செய்ததாக தண்டிக்கப்பட்டவர்.
ஜீவஜோதியை திருமணம் செய்துகொண்டால் மேன்மை அடையலாம் என்று ஜோதிடர்கள் சொன்னதை கேட்டு இப்படி செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு ராஜகோபால் உயிரிழந்தார். தற்போது, ஜீவஜோதியின் வாழ்க்கையை ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாக எடுக்கிறது. ஜீவஜோதியின் 18 ஆண்டு சட்டப்போராட்டத்தை கருவாக கொண்டு இப்படம் எடுக்கப்படவுள்ளது. விரைவில் நடிகர் நடிகையர் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
இதையும் படிங்க : சரவணன் அண்ணாச்சி நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்