ஹாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான படம் என்றால் அனைவரும் ஜேம்ஸ் பாண்ட் படத்தையே கூறுவார்கள். அதனால் தான் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியாகும் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பாகங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பெக்ட்ரே' படத்திற்கு பிறகு, தற்போது 'நோ டைம் டூ டை' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில், முந்தைய நான்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களில், நடித்த டேனியல் கிரெய்க் இப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார்.
-
Are you ready? #NoTimeToDie releases April 2020. pic.twitter.com/zc9Ab96ynj
— James Bond (@007) February 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Are you ready? #NoTimeToDie releases April 2020. pic.twitter.com/zc9Ab96ynj
— James Bond (@007) February 15, 2020Are you ready? #NoTimeToDie releases April 2020. pic.twitter.com/zc9Ab96ynj
— James Bond (@007) February 15, 2020
தற்போது, 'நோ டைம் டூ டை' படத்தின் 30 வினாடி டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் வழக்கம் போல் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இருக்கும் ஆக்க்ஷன் காட்சி, கார் சேஸிங், குண்டு வெடிப்பு போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இயக்குநர் கேரி ஜோஜி ஃபுகுனகா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் பெற்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துகள் முட்டாள்தனமானது - சோனம் கபூர்