தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக பெரும்பான்மையான திரைபிரபலங்கள் காலை 9 மணிக்குள்ளே வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதேபோன்று சென்னை திருவான்மியூரில் காலை 7 மணி அளவில் வாக்களிக்க வந்த நடிகர் அஜித் குமாரைக் காண ஏராளமான கூட்டம் கூடியிருந்தது. கூட்ட நெரிசலால் வாக்குச்சாவடிக்குள் செல்ல முடியாத நிலையிலும் தனது மனைவியுடன் சென்று வாக்கைப் பதிவு செய்தார் நடிகர் அஜித்.
இந்நிலையில், அஜீத் குமாரை வாக்குச்சாவடியில் யாரோ தலையில் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிவருகிறது.
இந்தக் காணொளியைக் கண்ட விஜய் ரசிகர்கள் அஜித்தை கிண்டல் செய்யும் விதமாக '#ஓட்பூத்தில்செமகாட்டு' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
மேலும், அஜித்குமாரின் மனைவி ஷாலினி வரிசையில் நின்று வாக்களிக்காததால் இரண்டு பெண்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.