சோனி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் எம்.குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரியஸ் 'இரு துருவம்'. இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் நந்தா, நடிகை அபிராமி, இயக்குநர் ஜெயம் ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் வைபவ், நலன் நந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் நந்தா பேசுகையில், ‘இரு துருவம் என்னுடைய மூன்றாவது வெப் சீரிஸ். இதை குமரன் என்னிடம் கூறும்போது இந்த கதை ஒரு முழுநீள திரைப்படமாக எடுக்கலாம் என்று கூறினேன். அந்த அளவுக்கு ஸ்கிரீன்பிளே மிகவும் நன்றாக இருந்தது. சினிமா, வெப் சீரியஸ் என்று நான் தனித்தனியாக பிரித்துப் பார்க்கவில்லை.
சீரியஸில் நடிப்பது மிகவும் கடினம். முதல் எபிசோட்டை பார்த்துதான் மக்கள் வருவார்கள். எனவே முதல் எபிசோடு கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். இப்போது வெப் சீரியஸில் ஹாலிவுட் - பாலிவுட் நடிகர்கள் நடிக்கிறார்கள். முன்னணி இயக்குநர்களும் இயக்குகின்றனர்’ என்றார்.
தொடர்ந்து அபிராமி பேசுகையில், ‘இந்த வெப் சீரிஸில் எனது பகுதி என்பது மிகவும் குறைவுதான். இது ஒரு த்ரில்லர் மற்றும் ரொமான்ஸ் படைப்பு. முதல் நாள் ரொமான்ஸ் காட்சி தான் படமாக்கப்பட்டது. ஆனால் நடிகர் நந்தா என்னிடம் பேசவில்லை. மிகவும் அமைதியாக இருந்தார். இறுதியில் நாங்கள் இருவரும் நடித்த காட்சிகளை திரையில் பார்க்கும் போது நன்றாக இருந்தது. இப்பொழுது நானும் நந்தாவும் நல்ல நண்பர்கள்’ என்றார்.
இதையும் படிங்க: 'சூரரைப் போற்று' படத்தில் சூர்யாவின் கதாபாத்திரப் பெயர் வெளியீடு!