ஜென்டில்மேன், காதலன் படத்தினை தொடர்ந்து ஷங்கர் இயக்கிய படம் இந்தியன். இப்படம் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த வசூலில் சாதனை படைத்தது. தந்தை மகன் என இரட்டை வேடங்களில் கமல்ஹாசன் பிரமிக்க வைத்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக 2.0 படப்பிடிப்பு முடியும் தருவாயில் பேச்சு அடிபட்டது.
அதேபோன்று 'இந்தியன் 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இணையத்தை தெறிக்க விட்டது. கமலின் புதிய பரிணாமம் எல்லோரையும் மலைக்க வைத்தது. போதும் போதும் என்கின்ற அளவிற்கு இப்படத்தின் அப்டேட் செய்திகள் நாளொரு வண்ணம் குவிந்தன. ஆனால், படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே இந்தியன் -2 டிராப் ஆனதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மீண்டும் ஷங்கர்-கமல் கூட்டணி மீண்டும் இணைந்ததை கேட்டு மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தியன் 2 டிராப் ஆனதால் ஷங்கர், முதல்வன் 2 படத்தை விஜயை வைத்து இயக்க தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் விஜய் முதல்வன்- 2வில் நடிக்க தாமதமாகும் என பேச்சு அடிபடுகிறது. இது ஒரு பக்கம் இருக்க கமலின் அதிதீவிர ரசிகர்கள் இந்தியன் -2 படத்தின் டிரெய்லரை உருவாக்கி இணையத்தை கலக்கி வருகின்றனர். காஜல் அகர்வால், கொரியன் நாயகி எண்ட்ரி என படத்தொகுப்பில் பிரித்து மேய்ந்துள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும் படக்குழுவினரே இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளதாக நம்பி வருகின்றனர். இந்த வீடியோ விவகாரம் ஷங்கரின் செவிகளுக்கு சென்றிருக்குமா என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.