இலியானா தற்போது வெளியிட்டுள்ள சன்பாத் எடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இலியானா. இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. எனினும் தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக வலம்வந்தார். விஜய் நடித்த நண்பன் படத்தில் ரீ என்ட்ரி ஆனார். இப்படத்திற்கு பிறகும் தமிழில் பெரிய அளவில் படவாய்ப்புகள் வரவில்லை.
சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இலியானா, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நெட்டிசன்களை திக்குமுக்காட வைப்பார்.
![ileana](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4867210_ileana-insta.jpg)
தற்போதும் அதேபோல் சன்பாத் எடுக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அதில் வெயிலில் ரொம்ப நேரம் இருக்காதே கருத்து விடுவாய் என்று அவரது தாயார் கூறியுள்ளாராம். இதற்கு அதனால் என்ன என்று சுட்டித்தனமாக பதில் அளிக்கும் விதமாக ஏமோஜி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்தப் புகைப்படம் வெளியான சிலமணி நேரங்களில் அதனை அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.
இதையும் வாசிங்க: 'நடிகையாக வராவிட்டால்....!' - மனம் திறந்த இலியானா