ETV Bharat / sitara

Asuran Movie: இளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தால் வந்த குழப்பம் - விளக்கமளித்த திரையரங்கம்! - வெக்கை நாவல்

’அசுரன்’ படத்தின் டைட்டில் கார்டில் ‘இளைய சூப்பர் ஸ்டார்’ என தனுஷ் பெயர் திரையில் வந்ததற்கு ’ராம் முத்துராம்’ திரையரங்க நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

Ilaya Superstar Dhanush
author img

By

Published : Oct 6, 2019, 7:39 PM IST

தனுஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ’அசுரன்’. எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி வெற்றிமாறன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி, சினிமா விமர்சகர்கள், திரைப்பட ரசிகர்கள் என அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றுவருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி ’ராம் முத்துராம்’ திரையரங்கில் இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் என்ற டைட்டில் போடப்பட்ட புகைப்படம் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் ரஜினிக்கு மட்டுமே பொருந்தும் என அந்தப் பட்டத்துக்கு போட்டிபோட்ட நடிகர்கள் பலரும் தெரிவித்துவிட்டனர். திருநெல்வேலியின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான ராம் முத்துராம், ‘இளைய சூப்பர் ஸ்டார்’ என டைட்டில் கார்ட் போட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து ராம் முத்துராம் நிர்வாகம், அந்த டைட்டில் கார்ட் தனுஷ் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது. ’அசுரன்’ படத்தில் இடம்பெற்றது அல்ல, நாங்கள் ரசிகர்களைத் திருப்திபடுத்த விரும்புகிறோம். அவர்களின் கொண்டாட்டம் எங்கள் திரையரங்கில் நிகழ்கிறது. எனவே அவர்களை முழுமையாக திருப்திபடுத்துவதே எங்கள் லட்சியம் என குறிப்பிட்டுள்ளது.

  • Clarification !!
    Title card was placed in Special Mashup Video which was made by the Fans Club not in #Asuran Movie !!
    We want our Audience to celebrate in our venue, Fans from outside cities are coming here. Our Goal is to satisfy them to the fullest.

    — Ram Muthuram Cinemas (@RamCinemas) October 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: ‘கோபப்படாதீங்க... எல்லாம் உங்களுக்காகத்தான்’ - விஜய் ரசிகர்களுக்கு சமாதானம்!

Intro:Body:

Ilaya Superstar Danush

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.