பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த 42 ஆண்டுகளாக சுமார் 6 ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து பதிவு செய்துள்ள நிலையில், பிரசாத் ஸ்டுடியோ இடத்திலிருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இட உரிமை தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு ஏற்கனவே சென்னை 17'வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தன்னுடைய இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், அதனால் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என இளையராஜா சார்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், இளையராஜா தொடர்ந்த இட பிரச்னை தொடர்பான வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி தீர்வு காண உத்தரவிட்டார்.
பிரசாத் ஸ்டுடியோ, இளையராஜாவுக்குமான உரசல் - எட்டப்படுமா சுமுக தீர்வு?