ETV Bharat / sitara

நேற்று இல்லே.. நாளை இல்லே.. எப்பவும் 'இசை ராஜா'வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! - புதிய இசையமைப்பாளர்கள் ஆண்மை இல்லாதவர்கள்

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசையில் கோலோச்சி வரும் இளையராஜா இன்று தன்னுடைய 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இளையராஜா
author img

By

Published : Jun 2, 2019, 6:31 PM IST

Updated : Jun 2, 2019, 8:34 PM IST

இளையராஜா இந்த பெயரைத் தாண்டி இரவும் கிடையாது. பயணமும் கிடையாது. பண்ணைபுரத்து பாசக்காரன். இந்த சமூகம் இசைக்கு காலங்காலமாக கட்டமைத்ததை, மண்ணின் இசையால் உடைத்து சுக்கு நூறாக்கியவர் ராஜா. ஏகாந்தத்தில் துணையாக இருப்பவர். வயல்களிலும், களத்துமேடுகளிலும் களைப்பைத் தீர்க்க கிராமத்து இசைவாணிகள் பாடிய மெட்டுக்களை, திரையிசையில் ஏற்றி அழகு பார்த்தவர். திரை இசைக்கும் எளிய மனிதனுக்கும் உள்ள இடைவெளியை குறைத்தவர். பிறப்பு முதல் இறப்பு வரையில் அனைவரின் வாழ்க்கையிலும் இசை வழியாக கலந்தவர்.

ilayaraja
இசையமைக்கும் இளையராஜா

மகிழ்ச்சியில் தூக்கி செல்வார். சோகத்தில் தாய்மடி கொடுப்பார். ஏனெனில் அவர் ஒரு அற்புத மனிதன். ஆன்மீகம், காதல், காமம், கொண்டாட்டம், சோகம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் இசை குறிப்பாளாக்கியவர். 'உனக்கு தேவையானதை எடுத்துக் கொள்..!' என்று சொல்லும் ஒற்றை இசை அகராதி அவர். மொழி தெரியாத இந்தி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த 1976 காலகட்டத்தில், 'அன்னக்கிளி' படத்தில் 'மச்சான பார்த்தீங்களா'... எனும் பாட்டு மூலம் ஒட்டுமொத்த இசையுலகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்தவர்.

ஒவ்வொரு பாடல்களுக்கும், பின்னணி இசை மூலம் படத்திற்கும் உயிர் கொடுத்த தாயுமானவர். ராஜா ஒரு அனிச்சை அட்சயம். குள்ள உருவம்தான் நம்மை கொள்ளை அடித்து வைத்திருக்கிறது. இசையில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. அத்தனை வகைகளையும் கலை கெடுக்காமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் பெரும் இசைப்புரட்சியை செய்த அன்னக்கிளியில் குயில் கூவ ஆரம்பித்தது அந்த குயில் இன்று வரை கூவுவதை நிறுத்தவே இல்லை.

ilayaraja
இளையராஜா

மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா என எளிய மக்களின் வாழ்க்கையை பாசாங்கு இல்லாமல் படமாக்கும் இயக்குநர்களின் படங்களில் இளையராஜா கொடுத்த பாடல்களும், மெல்லிய உணர்வுகளை கடத்தும் பின்னணி இசையும் காலம் கடந்தும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. பாலுமகேந்திரா இயக்கிய 'வீடு' படத்தில், கட்டுமானத்தில் இருக்கும் புதிய வீட்டை முதியவர், சுவரை தடவிக் கொண்டு ஆனந்த பூரிப்புடன் சுற்றிப் பார்க்கும் வசனமில்லாத காட்சியில் புல்லாங்குழல், வயலின் மூலம் இளையராஜா கொடுத்த பின்னணி இசை ஒன்று மட்டும் போதும், அவர் பாடல்களில் மட்டுமல்ல... பின்னணி இசையிலும் ராஜா என்பதை நிரூபிப்பதற்கு. தாரை தப்பட்டை, பழசிராஜா ஆகிய படங்களுக்கு பின்னணி இசைக்காக இரண்டு தேசிய விருதுகளை கொடுத்து, மத்திய அரசு பெருமை தேடிக் கொண்டது.

ilayaraja
தேசிய விருது பெறும்போது இளையராஜா

அதேபோன்று, எஸ்பி முத்துராமன், கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், கங்கை அமரன், பி.வாசு, ஆர்.கே.செல்வமணி, உதயகுமார் உள்ளிட்ட கமர்சியல் இயக்குநர்களின் படங்களில் கொடுத்த துள்ளல் இசையும் கொண்டாடப்படுகின்றன. நமக்கு தெரிந்ததெல்லாம் இசையில் மூன்று. ஃபோக்ஸ், வெஸ்டர்ன், க்ளாசிக்கல். இந்த மூன்றையும் 'ராக்கம்மா கையத் தட்டு பாடலில் யூஸ் பண்ணி பின்னிருப்பார். ஒரு ஜீவன் அழைத்தது... காற்றே எந்தன் கீதம்... துள்ளி எழுந்தது பாட்டு... தென்றல் வந்து தீண்டும்போது... ஒளியிலே தெரிவது தேவதையா... இளங்காற்று வீசுதே... நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி... என காலம்கடந்த ஆயிரக்கணக்கான கிளாஸ்சிக் பாடல்களை தந்த ஒரே இசை அபூர்வம் அவர்.

ilayaraja
இசை கோர்ப்பின்போது இளையராஜா

எப்போதும் ஒரு கூற்று உண்டு. அபூர்வங்களுக்கு ஆயுள் கம்மி. இருப்பினும் இளையராஜா மட்டும் வாழ்ந்துக் கொண்டே இருக்கிறார்...இருப்பார். அவர் இசையும் வாழ்ந்து கொண்டே இருக்கும். ஏனெனில் அவர் ஒரு ஞானி. இளையராஜாவின் பேச்சுக்களை வைத்து அவரை சிலர் கொட்டி கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் கொட்டும் கொட்டிலும் மெட்டு தேடுவார். தொட்டிலுக்கும் அவர்தான் கட்டிலுக்கும் அவர்தான்.

அவர் பேசுவதை வைத்து அவரை என்ன வேண்டுமானாலும் பேசலாம். பேசுவோம். நம் வார்த்தைகளை அவர் ஸ்வரங்களாக சுவீகரிக்கக்கூடியவர். இசையில் எப்போதும் ஜன வாசம் வீச வேண்டும். அதுதான் இசை. அவர் எப்போதும் இளையராஜா இசைந்து மட்டும்தான் வருவார். 'ஜன கன மன...' இந்திய நாட்டிற்கு தேசிய கீதமாக இருக்கலாம். ஆனால் நம் ஜனத்திற்கு கானம் இசைத்தவர் இசையராஜா. ஜன கான ராஜாவுக்கு அந்த இசைக் கானும் அடி பணிய வேண்டும். ஏனெனில் அதுவே அறம்.

ilayaraja
பாரதிராஜா, பாலுமகேந்திரா உடன் இளையராஜா

"இளையராஜா இல்லாத படங்களை இயக்க வந்த வாய்ப்பை நான் தவிர்த்தேன்" என்று பாலுமகேந்திரா தெரிவித்திருந்தார். ஆம் அவருக்கு மட்டுமல்ல... எவருக்கும் தவிர்க்க முடியாத நபர்தான் இளையராஜா. நேற்று இல்லே.. நாளை இல்லே.. எப்பவும் இசை ராஜாவாக இருக்கும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

இன்று, இசைஞானி இளையராஜா பிறந்தநாள்.
Last Updated : Jun 2, 2019, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.