பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகை மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் கடந்த 7ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த 11ஆம் தேதி அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால் மீரா மிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமலும், தன்னை யாராலும் கைது செய்ய முடியாது எனவும் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பிறகு தலைமறைவாக இருந்த மீராவை, கேரளாவில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து, இன்று (ஆக.15) சென்னை அழைத்துவந்தனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்ட மீரா, தன்னுடைய கையை காவலர்கள் உடைத்ததாகவும், கொடுமைப்படுத்துவதாகவும், சாப்பாடு கொடுக்கவில்லை எனவும் சத்தமிட்டபடியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தன்னுடைய வழக்கறிஞர் வந்தால் மட்டுமே, பேசுவேன் என தொடர்ந்து வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டு வருவதாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.
இதையும் படிங்க: ’சோறே போடல’ - மீரா மிதுன் புலம்பல்