ETV Bharat / sitara

'இந்தியன் 2' படப்பிடிப்பில் நடந்ததைக் கூறினேன் - கமல் பேட்டி

'இந்தியன் 2' படப்பிடிப்பில் நடந்தவற்றைக் கூறியதாகவும், விபத்துகள் நேராமல் இருப்பதற்கு நாங்கள் எடுக்கும் முதல்கட்ட முயற்சியாகவே இந்தக் கலந்துரையாடலை கருதுவதாகவும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணைக்குப் பின் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Indian 2 movie accident issue
Kamal haasan after CBCID enquiry
author img

By

Published : Mar 3, 2020, 1:42 PM IST

Updated : Mar 3, 2020, 2:34 PM IST

சென்னை: 'இந்தியன் 2' படப்பிடிப்பின்போது நடந்தவற்றை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் கூறியதாக நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்குப் பின் பேட்டியளித்தார்.

'இந்தியன் 2' படப்பிடிப்பில் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட விபத்து தொடர்பாக விசாரணையில் முன்னிலையாகுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த விசாரணைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று முன்னிலையானார். அவரிடம் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது:

'இந்தியன் 2' படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பதை விசாரணையின்போது கூறினேன். இதை வாக்குமூலமாகப் பதிவு செய்துகொண்டனர்.

நடந்த விபத்தில் அடிபடாமல் தப்பித்தவர்களின் நானும் ஒருவன். அதனால் நடந்த சம்பவத்தைப் பற்றிய விவரங்களைக் கூறுவது எனது கடமை. இழந்த மூன்று சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதைப் பார்க்கிறேன்.

எங்கள் துறையில் இனி இதுபோன்று விபத்துகள் நேராமல் இருப்பதற்கு நாங்கள் எடுக்கும் முதல்கட்ட முயற்சியாகவே இந்தக் கலந்துரையாடலைக் கருதுகிறேன்.

இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அவர்கள் சொன்ன கருத்துகளையும் கேட்டுள்ளோம். கூடிய விரைவில் எங்கள் துறையைச் சார்ந்தவர்களைச் சந்தித்துப் பேசி, அது குறித்த தகவல்களையும் ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

I explained what happens in Indian 2 shoot - Kamal

கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி இரவு, சென்னை அருகேயுள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற 'இந்தியன் 2’ படப்பிடிப்புத் தளத்தில் மின் விளக்குகளைத் தூக்கிச் செல்லும் ராட்சத கிரேன் அறுபட்டு விழுந்ததில், இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநர் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர், 12 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாற்றி ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இந்தியன் 2 படத்துக்கு அரங்கு அமைத்த மேலாளர், கிரேன் உரிமையாளர், கிரேன் ஆப்பரேட்டர் உள்பட ஆறு பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோல் படத்தின் இயக்குநர் ஷங்கரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

Last Updated : Mar 3, 2020, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.