ETV Bharat / sitara

ஹிப்ஹாப் ஆதியின் யூ-டியூப் சேனல் மீட்பு - hiphop aadhi

ஹிப்ஹாப் ஆதி தனது யூ-டியூப் சேனல் மீண்டும் மீட்கப்பட்டுவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹிப்ஹாப் ஆதி
ஹிப்ஹாப் ஆதி
author img

By

Published : Jul 27, 2021, 5:00 PM IST

சுயாதீன இசைக் கலைஞரான ஹிப்ஹாப் ஆதி, 'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனையடுத்து 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' ஆகிய படங்களில் நடித்தார்.

இதற்கிடையில் ஹிப்ஹாப் ஆதியின் யூ-டியூப் சேனலை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நேற்று (ஜூலை 26) முடக்கி, அதிலிருந்த வீடியோக்களை அழித்தனர்.

இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதியின் யூ-டியூப் சேனல் மீண்டும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சேனலில் இருந்த பாடல்களும் மீண்டும் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " I'm back. உங்கள் அன்புக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோன்று நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டு, பின்பு மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தீபாவளி ரேஸில் இருந்து விலகிய வலிமை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.