தமிழ் சினிமாவில் தெரி, கத்தி, மாரி, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் மூத்த நடிகர் செல்லதுரை.
உடல்நலக்குறைவால் இன்று (ஏப். 30) உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்,இசை அமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி, வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செல்லதுரை தாத்தா குறித்து ஹிப்ஹாப் ஆதி நெகிழ்ச்சி வீடியோ அதில், "நட்பே துணை படப்பிடிப்பின்போது அவருடன் இருக்கும்போது தினமும் வேடிக்கையாக இருக்கும். கடைசி வரை நடிச்சுட்டே இருக்கணும்னு என்னிடம் சொல்வார். சிங்கிள் பசங்க பாடல் படப்பிடிப்பின்போது,அவர் வீட்டிற்கு செல்ல இரவு தாமதமானது. அப்போதுதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நாங்கள் எல்லோரும் சோர்வாக இருந்தோம். ஆனால் அவர் உற்சாகமாக இருந்தார். நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கண்ணீர் விட்டு கதறிய கே.வி. ஆனந்த் மகள்கள்!