ETV Bharat / sitara

தோர் வேடத்தில் ரந்தீப் ஹூடா - 18 நிமிடத்தில் 81 ஆயிரம் லைக்குகள்!

பிரபல அப்ளிகேசன் மூலம் மார்வெல்லின் தோர் கதாபாத்திரத்தில் தனது முகத்தை பொருத்தி பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா, க்ரிஷ் ஹெம்ஸ்வொர்த்தை கலாய்த்திருக்கிறார்.

Randeep Hooda
Randeep Hooda
author img

By

Published : Sep 3, 2020, 12:39 AM IST

இந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகர் ரந்தீப் ஹூடா. சிறந்த கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து அசத்திவருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘எக்ஸ்ட்ராக்சன்’ எனும் ஹாலிவுட் திரைப்படம் வெளியானது. இதில் இவருடன் முன்னணி கதாபாத்திரத்தில் ‘தோர்’ புகழ் க்ரிஷ் ஹெம்ஸ்வொர்த் நடித்திருந்தார். ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ரந்தீப் ஹூடாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில், க்ரிஷ் ஹெம்ஸ்வொர்த்தை கலாய்த்து ரந்தீப் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், க்ரிஷ் படப்பிடிப்பில் இருக்கும்போது தனது தோர் சுத்தியலை விட்டுவிட்டால் என்ன நடக்கும் என குறிப்பிட்டுள்ளார். பிரபல அப்ளிகேசன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அந்தக் காணொலியில், தோர் வேடத்தில் ரந்தீப் ஹூடா இருக்கிறார். இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 18 நிமிடத்தில் 81 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.