ETV Bharat / sitara

ஆன்லைனில் நம்ம வீட்டு பிள்ளை ரிலீசுக்கு தடை

author img

By

Published : Sep 26, 2019, 6:39 PM IST

Updated : Sep 26, 2019, 6:45 PM IST

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தை ஆன்லைனில் வெளியிடவும், கேபிளில் திரையிடவும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன்

சென்னை: நாளை (செப்டம்பர் 27ஆம் தேதி) வெளியாக இருக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை 6 ஆயிரத்து 455 இணைய தளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் "நம்ம வீட்டு பிள்ளை". இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது நாளை (செப்டம்பர் 27ஆம் தேதி) வெளியாகிறது.

இந்த நிலையில், படத்தை இணைய தளங்கள் மற்றும் கேபிள் நிறுவனங்கள் வெளியிடத் தடை விதிக்கக் கோரி சன் நெட்வொர்க் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை 6 ஆயிரத்து 455 இணையதளங்களில் வெளியிடவும், பதிவிறக்கம் மற்றும் தரவிறக்கம் செய்யவும், லோக்கல் கேபிள் டிவி சேனல்களில் படத்தை வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டார்.

Intro:Body:திரையரங்களில் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகயிருக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை 6,455 இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள "நம்ம வீட்டு பிள்ளை" திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

இப்படமானது செப்டம்பர் 27ம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ள நிலையில் இணையதளங்கள் மற்றும் கேபிள் நிறுவனங்கள் இப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சன் நெட்வோர்க் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை 6 ஆயிரத்து 455 இணையதளத்தில் வெளியிடவும், பதிவிறக்கம் மற்றும் தரவிறக்கம் செய்யவும் தடை விதித்து இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் உத்தரவிட்டார். மேலும் லோக்கல் கேபிள் டிவி சேனல்களிலும் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்Conclusion:
Last Updated : Sep 26, 2019, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.