ETV Bharat / sitara

'மகாநதி' ஷோபனா பாடிய பாடலை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்குத் தடை - நடிகை ஷோபானவின் பாடல்கள்

நடிகை ஷோபனாவிடம் மைனராக இருந்தபோது போட்ட ஒப்பந்தம் செல்லாது என்ற வாதத்தை ஏற்று, அவர் பாடிய பாடல்களைப் பயன்படுத்த சிம்பொனி நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

HC ban sympony company to use Mahanadi movie fame Actress Shobana songs
Actress, Singer Shobana
author img

By

Published : Mar 10, 2020, 3:17 PM IST

சென்னை: 'மகாநதி' ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம் பாடல்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு இடைகாலத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'மகாநதி' படம் மூலம் பிரபலாமனவர் நடிகை ஷோபனா. கர்நாடக இசை கலைஞரான இவர் 1995ஆம் ஆண்டு சிம்பொனி நிறுவனத்துடன் ஒப்பந்தம்செய்து 'கந்த சஷ்டி கவசம்', 'டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்' ஆகிய இரண்டு ஆல்பங்களைப் பாடினார்.

இந்த இரண்டு ஆல்பங்களும் சிம்பொனி, பக்தி எஃப்.எம். என்ற பெயரில் யூ-ட்யூபில் வெளியிடப்பட்டது. இதனை தற்போது 47 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இதையடுத்து தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது பாடலைப் பயன்படுத்தி சிம்பொனி நிறுவனம் வருமானம் பெறுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை ஷோபனா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, 13 வயதில் மைனராக இருந்தபோது ஷோபனாவிடம் சிம்பொனி நிறுவனம் போட்ட ஒப்பந்தம் சட்ட ரீதியாகச் செல்லாது என அவரது தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் ஹரிஹர அருண் வாதிட்டார்.

மேலும், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலிருந்த புகைப்படங்களை அனுமதி இல்லாமல் எடுத்து பாடல்களுக்குப் பயன்படுத்தியது சட்டவிரோதமானது என்பதால், இந்த இரண்டு ஆல்பங்களையும் வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி எம்.எஸ். ரமேஷ், 'மகாநதி' ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம், டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் ஆல்பங்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: விஜய்யை ஏமாற்றியது போல் ஷோபனாவையும் ஏமாற்றிய அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.