நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகரும் கூட.

இவர் 2002ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழித் திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி உள்ளிட்ட 80-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமான நடிகர் ஆனார்.

நந்தனம் திரைப்படத்தில் அறிமுகம்
இவர் 2006ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். 1982ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுகுமாரன் ஒரு நடிகர். தாயார் மல்லிகா சுகுமாரனும் ஒரு நடிகை. இவருக்கு இந்திரஜித் சுகுமாரன் என்ற ஒரு மூத்த சகோதரர் உண்டு. இவர் மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவருகின்றார்.

இவர் 2011ஆம் ஆண்டு பிபிசி இந்தியா தொலைக்காட்சி செய்தியாளர் சுப்ரியா மேனனைத் திருமணம் செய்துகொண்டார். இவர் 2002ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் நந்தனம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து புதிய முகம், போக்கிரி ராஜா, அன்வர், உருமி உள்ளிட்ட 60-க்கும் மேல் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படங்கள்
2005ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, 2008ஆம் ஆண்டு வெள்ளித்திரை 2009ஆம் ஆண்டு நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

2010ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ராவணன் என்ற திரைப்படத்தில் நடித்தார். வசந்தபாலன் இயக்கிய காவிய தலைவன் என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைந்து நடித்துள்ளார். இவர் புதிய முகம், தாந்தோனி, போக்கிரி ராஜா, அன்வர், உருமி, ஹீரோ, செவன்த் டே போன்ற திரைப்படங்களில் சில பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் இன்று தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இவரது ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க : விவேக்கிற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஆர்யா