மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருபவர் நிவின் பாலி. இவர் தமிழிலும் சில வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். தமிழில் 'நேரம்' என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் அவருக்கு வெற்றியைத் தந்தது. மேலும், இந்தப் படம் மூலம்தான் நிவின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்தப் படத்தை அடுத்த, 2016ஆம் ஆண்டு 'அவியல்' என்ற படத்தில் நடித்தார். அந்தப் படமும் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. அதன்பின், 2017ஆம் ஆண்டு 'ரிச்சி' என்ற படத்தில் நடித்தார்.
மலையாளத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ’மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ தான் நிவின் பாலி முதல் படம். 2012ஆம் ஆண்டுதான் நிவின் தன் சினிமா கெரியரைத் தொடங்கினார். இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி இயக்கி, நிவின், இஷா நடிப்பில் உருவான 'தட்டத்தின் மறயத்து' என்ற படம் வெளியானது. இந்தப் படத்தை கேரளவில் உள்ள இளம் தலைமுறையினர் கொண்டாடினர். பின் ராஜேஷ் பிள்ளை, ஆஷிக் அபு, ஷ்யாம் பிரசாத் என மலையாளத்தின் முன்னணி இயக்குநர்களிடமிருந்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.
ஆனாலும் தனக்கான சரியான இயக்குநரைத் தேடிக்கொண்டிருந்த நிவின், தன்னை வைத்து பல குறும்படங்கள் எடுத்த அல்போன்ஸ் புத்ரனிடமே மீண்டும் தஞ்சமடைந்தார். மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலுமே ரிலீசான 'நேரம்' படத்தை உருவாக்கினார்.
இந்தப் படம் இரண்டு மொழிகளிலுமே செம்ம ஹிட், பாடல்கள் மாஸ் ஹிட். மலையாள சினிமாக்கள் மீது எப்போதும் சொல்லப்படும் மெதுவாக நகர்வது என்ற குற்றச்சாட்டில்லாமல் படம் பரபரப்பாக இருந்தது.
அந்த வெற்றியின் தொடர்ச்சிதான் 'பிரேமம்'. ஆனால் பிரேமம் ஹிட் என்பதே நிவினின் அடையாளம். காரணம் எளிதானது, வெறும் மூன்றரைக் கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட படத்தின் திரையரங்கு வசூல் மட்டும் கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய். மொத்தப் படத்தையும் ஒற்றையாளராகத் தாங்கியிருப்பார் நிவின். அதுதான் அவரை கேரளாவையும் தாண்டி தென்னிந்தியா முழுவதும் கொண்டுசேர்த்தது.
இதற்கு நடுவில் '1983', 'ஓம் ஷாந்தி ஓசானா', 'பெங்களூர் டேஸ்', 'ஒரு வடக்கன் செல்ஃபி' எனப் பல ஹிட் கொடுத்திருக்கிறார் நிவின். இவர் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இவருக்கு பல திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர். #HBD நிவின் பாலி
இதையும் படிங்க : அரண்மனை 3 - விவேக் குறித்து சுந்தர். சி உருக்கம்