மௌனிகா என்று அழைக்கப்படும் விஜய ரேகா என்பவர் தமிழ் நடிகை மட்டும் இல்லாது மேடை நாடக நடிகையும் ஆவார். இவர் 1985ஆம் ஆண்டு இயக்குநர் பாலு மகேந்திராவால் உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற திரைப்படம் மூலம் திரைத் துறைக்கு அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தாலாட்டு கேக்குதம்மா (1991), வண்ண வண்ண பூக்கள் (1992), கடைக்குட்டி சிங்கம் (2018) போன்ற பல திரைப்படங்களில் நடத்துள்ளார். இவர் 1998இல் பாலு மகேந்திராவை திருமணம் செய்துகொண்டார்.
மேலும், நிம்மதி உங்கள் சாய்ஸ் 2 (1997), சொந்தம் (1999-2000), சாரதா (2006-2008) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் இன்று தனது பிறந்தந்நாளைக் கொண்டாடிவரும் நிலையில் அவரது ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க : விக்கியுடன் ஆன்மிக வழிபாட்டில் இறங்கிய நயன்!