ETV Bharat / sitara

தடைகளை உடைத்த ஹன்சிகாவின் ‘மஹா’ - டீசர் தேதி அறிவிப்பு - maha teaser

இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிடுவதா அல்லது ஓடிடியில் வெளியிடுவதா என்ற பிரச்னையை ஒதுக்கி வைத்துவிட்டு, படத்தின் டீசரை முதலில் வெளியிடுவோம் என இருதரப்பும் முடிவு செய்திருக்கிறது.

Maha Movie release poster
Maha Movie release poster
author img

By

Published : Jun 30, 2021, 4:57 PM IST

சென்னை: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள ‘மஹா’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா, சிம்பு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘மஹா’. இதில் சனம் ஷெட்டி, கருணாகரன், தம்பி ராமய்யா, மஹத் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

மஹா
மஹா

ஹன்சிகா புகைப் பிடிக்கிறார், இது மத உணர்வை புண்படுத்தும் படம் என இதன் போஸ்டர்களை வைத்து சர்ச்சைகள் எழத்தொடங்கின. இந்த சர்ச்சைகள் ஒருபுறமிருக்க, படத்தின் இயக்குநரான ஜமீல், படத் தயாரிப்பு நிறுவனம் தனக்கு பேசிய ஊதியத்தை வழங்கவில்லை எனவும், படத்தை ஓடிடியில் வெளியிட முயற்சிக்கிறது எனவும் வழக்கு தொகுத்திருந்தார். தற்போது இருதரப்பும் சமாதானம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

மஹா
மஹா

இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிடுவதா அல்லது ஓடிடியில் வெளியிடுவதா என்ற பிரச்னையை ஒதுக்கி வைத்துவிட்டு, படத்தின் டீசரை முதலில் வெளியிடுவோம் என இருதரப்பும் முடிவு செய்திருக்கிறது. அதன்படி ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு இதன் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தளபதி என்றால் லவ் - ராஷ்மிகா கொடுத்த அப்டேட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.