ETV Bharat / sitara

ஒருவழியாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான 'மஹா' டீசர்

author img

By

Published : Jul 2, 2021, 7:41 PM IST

சென்னை: நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள 'மஹா' படத்தின்  டீசர் ஒருவழியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது.

மஹா
மஹா

நடிகை ஹன்சிகாவின் 50ஆவது படமாக உருவாகியிருக்கிறது 'மஹா'. உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கியுள்ள இப்படத்தில், சிம்பு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் கருணாகரன், சனம் ஷெட்டி, மஹத், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் பணிகள் ஒரு சில காரணங்களால் தள்ளிப்போயின.

இதனையடுத்து தற்போது இப்படம் தொடர்பாக ஏற்பட்ட சிக்கல்களைச் சரிசெய்து படக்குழு ஒரு வழியாக வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (ஜூலை 2) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஹன்சிகாவின் குழுந்தை கொலைசெய்யப்படுகிறார். ஆனால் குழந்தையை யார் கொலைசெய்தார், கொலைக்கான பின்னணி என்ன என்பதே படத்தின் கதையாக இருக்கும் என டீசர் மூலம் அறிய முடிகிறது. சிம்பு இதில் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதுபோல் தெரிகிறது.

அதேபோல் டீசரில், 'எனக்கு வர பிரச்சினைக்கெல்லாம் காரணமே, நான் உண்மையா இருக்கிறதுதான்' என சிம்பு பேசும் வசனம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சிம்பு படத்தை விளம்பரம் செய்யும் சிவகார்த்திகேயன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.