தமிழ் சினிமாவின் 'சின்ன குஷ்பூ' என்று அழைக்கப்படுபவர், நடிகை ஹன்சிகா. இவரது அண்ணன் திருமணம் உதய்பூரில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஹன்சிகா தனது அண்ணன் திருமண நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது யூ-ட்யூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திருமணத் தொடக்கம் முதல் தனது உடை அலங்காரம், மேக்கப் உள்ளிட்ட அனைத்தையும் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். அப்போது தனது நண்பர்கள், சகோதரர்களுடன் அவர் நடனமாடியுள்ளது ரசிகர்களிடையே வைரலாகப் பரவி வருகிறது.