த.செ.ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. இதில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசன், இயக்குநர் பா.இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்டப் பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
வெகுஜன மக்களுக்கு இருளர் இன மக்கள் படும் துயரம் புரியும் வண்ணம் 'ஜெய் பீம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.
சூர்யாவை சீண்டிய ஹெச்.ராஜா
இந்நிலையில் பாஜக உறுப்பினர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர், தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்துகொள்வோம்" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டைப் பார்த்த சூர்யா லைக் செய்துள்ளார்.
சூர்யாவின் இந்த லைக் நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் சிலர் ஹெச்.ராஜாவை சூர்யா இதை விட மானபங்கம் படுத்த முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஜெய் பீம்' பார்த்தேன் கண்கள் குளமானது - கமல்ஹாசன்