குக்கூ, ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. ஜீவா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடாஷா சிங் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் சென்சார் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டது. படத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்யும் சில காட்சிகள் இருந்ததால், இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறுவதில், சிக்கல் ஏற்பட்டது.
அதன்பிறகு சிக்கல் நீங்கி ஒருவழியாக படத்திற்கு 'A' சர்டிஃபிகேட் கொடுத்தனர். இதையடுத்து 'ஜிப்ஸி' படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பல்வேறு பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
-
@JiivaOfficial @iamnatashasingh @Music_Santhosh @Laljosemechery @selvakumarskdop @YugabhaarathiYb @SunnyWayn @raymondcrasta @saregamasouth @proyuvraaj @OlympiaMovies #GypsyfromMarch6 pic.twitter.com/3A3In6GA5L
— Director Rajumurugan (@Dir_Rajumurugan) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">@JiivaOfficial @iamnatashasingh @Music_Santhosh @Laljosemechery @selvakumarskdop @YugabhaarathiYb @SunnyWayn @raymondcrasta @saregamasouth @proyuvraaj @OlympiaMovies #GypsyfromMarch6 pic.twitter.com/3A3In6GA5L
— Director Rajumurugan (@Dir_Rajumurugan) February 23, 2020@JiivaOfficial @iamnatashasingh @Music_Santhosh @Laljosemechery @selvakumarskdop @YugabhaarathiYb @SunnyWayn @raymondcrasta @saregamasouth @proyuvraaj @OlympiaMovies #GypsyfromMarch6 pic.twitter.com/3A3In6GA5L
— Director Rajumurugan (@Dir_Rajumurugan) February 23, 2020
இந்த நிலையில் சிக்கல்கள் அனைத்தும் சரிசெய்யபட்ட நிலையில் 'ஜிப்ஸி' திரைப்படம் வரும் மார்ச் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இச்செய்தி ஜீவா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: யூ-ட்யூபில் 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த 'குட்டி ஸ்டோரி' பாடல்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்!