கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவான இத்திரைப்படம், பல்வேறு நிதி பிரச்னைகளால் மூன்று ஆண்டுகள் கழித்து தாமதமாக வெளியானது.
இதையடுத்து 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தோடு மீண்டும் இணைந்து 'ஜோஸ்வா இமைபோல் காக்க' திரைப்படத்தையும் வருண், ராஹேய்யை வைத்து கௌதம் இயக்கினார்.
ஆரம்பத்தில் தர்புகா சிவாவை இத்திரைப்படத்திற்கு இசையமைப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது பாடகர் கார்த்திக், இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் கௌதம் பாணியில் சிங்கிள் ட்ராக் பாடல் ஒன்று வெளியாகயிருக்கிறது. 'ஹே லவ்' என்னும் இப்பாடல் பிப்ரவரி 29ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இவன் காதலின் ரசிகன் - HBD Gautham Vasudev Menon