வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'வெயில்' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடைய சகோதரியின் மகனும் ஆவார். 'கிரீடம்', 'பொல்லாதவன்', 'மதராசப்பட்டினம்', 'ஆடுகளம்', 'தெறி', 'அசுரன்' உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
![gv-prakash](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4865185_gvp.jpg)
இசை ஒருபுறமிருக்க 'டார்லிங்' திரைப்படம் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்து பின்னர், 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா', 'கடவுள் இருக்கான் குமாரு', 'புரூஸ் லீ', 'குப்பத்து ராஜா', 'சிவப்பு மஞ்சள் பச்சை' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் வசம் தற்போது, 'ஐங்கரன்', 'அடங்காதே', 'ஜெயில்', '4ஜி', 'பேச்சிலர்' உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் உள்ளன. இந்த நிலையில், இவரது குடும்பத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு புதிய வரவு காத்திருக்கிறது.
![gv-prakash](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4865185_gvpi1.jpg)
இவரது தங்கை பவானி ஸ்ரீ தற்போது நடிகையாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கும் க.பெ. ரணசிங்கம் திரைப்படத்தில் இரண்டாவது நடிகையாக அறிமுகமாகிறார் பவானி. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'பரியேறும் பெருமாள்' இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்திலும் பவானி நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.
மேலும், 'இறுதிச் சுற்று' பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் 'சூரரைப் போற்று' திரைப்படத்திலும் முக்கிய கதாபாதத்திரத்தில் பவானி நடிக்கவுள்ளார்.
![gv-prakash](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4865185_gvp123.jpg)
'கைதி'யை விமர்சனம் செய்த இளைஞர்: சவுக்கடி பதில் கொடுத்த தயாரிப்பாளர்..!