ETV Bharat / sitara

கார்த்தியின் 'சர்தார்' படப்பிடிப்புக்கு தயாராகும் பிரம்மாண்ட செட்!

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் 'சர்தார்' படத்தின் படத்திற்காக பிரம்மாண்டமான அரங்கம் தயாராகி வருகிறது.

Sardar
Sardar
author img

By

Published : Jun 25, 2021, 6:10 AM IST

'இரும்புத்திரை', 'ஹீரோ' ஆகிய படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். இவர் கார்த்தியை வைத்து 'சர்தார்' என்னும் படத்தை இயக்கவுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் எல்லை குறித்த கதை என கூறப்படுகிறது.

இது கார்த்தியின் 22ஆவது படமாகும். இப்படத்தில் ராஷிகண்ணா, ‘கர்ணன்’ ரஜிஷா விஜயன் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும், முரளி ஷர்மா, முனீஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பிரபல இந்தி நடிகர் சுன்கி பாண்டே (Chunky Panday) முதல் முறையாக தமிழ் படத்தில் வில்லன் வேடத்தில் தோன்றுகிறார். மேலும் நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்‌ஷ்மன்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கியது. இதற்கிடையில், கரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி படப்பிடிப்பை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து சர்தார் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்கவுள்ளது. இதற்காக பிரம்மாண்ட செட் உருவாக்கப்பட்டு வருகிறது.'சர்தார்' படத்தின் கதை வெவ்வேறு விதமான இடங்களில் பிரமாண்டமான சண்டை காட்சிகளுடன் நடப்பதால், தென்காசி தொடங்கி சென்னை, வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பினை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: நடிகர் கார்த்தி ரசிகர்களுக்கு விடுத்த அன்பிற்குரிய வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.