பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது.
கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக பிக்பாஸ் 4ஆவது சீசன் தாமதமாக அக்டோபர் மாதம் தொடங்கியது. தற்போது, பிக்பாஸ் 5ஆவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்கின்றனர் என்பது குறித்த தகவல், கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அதில் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ளப் போவதாகவும் பேசப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிக்பாஸ் வீடு முன்பு அவர் நின்றுகொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அவர் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்பது போல தெரிகிறது.
இவரை தவிர, ’குக்கு வித் கோமாளி’ கனி, பாபா பாஸ்கர், சுனிதா, ஜான் விஜய், ஷகிலா மகள் மிலா உள்ளிட்டோர் கலந்து கொள்ளப் போவதாகக் கூறப்படுகிறது.