மலையாளத்தில் சுராஜ் வெஞ்சராமுடு நடிப்பில் இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25.
பாசத்திற்காக ஏங்கும் தந்தை வெளிநாட்டில் இருந்து மகன் கொண்டு வரும் ரோபோவுடன் நட்பாகி விடுகிறார். சுவாரஸ்யமான இந்த கதை மலையாளத்தில் வெளியாக, திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வசூலை வாரிக்குவித்தது.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்கு கடும்போட்டி நிலவி வந்த சூழ்நிலையில், அதன் உரிமையை முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கைப்பற்றினார்.
கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளர்களாகப் பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசயமைக்கிறார்.
'கூகுள் குட்டப்பா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இறுதிகட்ட படப்பிடிப்பில் சியான் 60!