சென்னை: 'தென்மேற்குப் பருவக்காற்று', 'நீர்ப்பறவை’, 'தர்மதுரை', 'கண்ணே கலைமானே', 'இடம் பொருள் ஏவல்', 'மாமனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார், இயக்குநர் சீனு ராமசாமி.
ஜி.வி.பிரகாஷுடன் இணையும் காயத்ரி
தற்போது அவர் இசையமைப்பாளரும், பாடகரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரை கதாநாயகனாக கொண்டு ஒரு படத்தினை இயக்கி வருகிறார்.

மேலும் இப்படத்தின் கதாநாயகியாக, 'ரம்மி', 'புரியாத புதிர்' உள்ளிட்டப் படங்களில் நடித்த நடிகை காயத்ரி நடிக்க உள்ளார். இதில் காயத்ரிக்கு பள்ளி மாணவி, செவிலியர், தாய் என மூன்று பருவங்களில் வருவது போன்ற கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது.
ட்வீட்
கடந்த ஜூலை 30ஆம் தேதி இது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.
-
After #Maamanithan movie this talented Actress @SGayathrie pairing with @gvprakash in our upcoming production No#2 @Kalaimagan20 @SkymanFilms@SureshChandraa @NRRaghunanthan @Vairamuthu pic.twitter.com/WvuDHPjIhS
— R.Seenu Ramasamy (@seenuramasamy) July 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">After #Maamanithan movie this talented Actress @SGayathrie pairing with @gvprakash in our upcoming production No#2 @Kalaimagan20 @SkymanFilms@SureshChandraa @NRRaghunanthan @Vairamuthu pic.twitter.com/WvuDHPjIhS
— R.Seenu Ramasamy (@seenuramasamy) July 30, 2021After #Maamanithan movie this talented Actress @SGayathrie pairing with @gvprakash in our upcoming production No#2 @Kalaimagan20 @SkymanFilms@SureshChandraa @NRRaghunanthan @Vairamuthu pic.twitter.com/WvuDHPjIhS
— R.Seenu Ramasamy (@seenuramasamy) July 30, 2021
தொடங்கியது படப்பிடிப்பு
இப்படத்திற்கு பாடலாசிரியராக வைரமுத்துவும், இசையமைப்பாளராக ரகுநந்தன் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இப்படத்தினை ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 2) பூஜையுடன் தொடங்கியது. தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில், இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: பிக்பாஸ் கவின்- ரெபா ஜான் இணையும் வெப் சீரீஸ்!