ETV Bharat / sitara

சிவகார்த்திகேயனை இயக்குகிறார் கௌதம் மேனன்? - இயக்குநர் கௌதம் மேனன்

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

gowtham menon
gowtham menon
author img

By

Published : Aug 30, 2021, 12:08 PM IST

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்கள் வரிசையில் கௌதம் மேனனும் ஒருவர். சமீப காலங்களாக அவர் இயக்கிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றன.

இதற்கு காரணம் கௌதம் மேனனுக்கு கடன் பிரச்னை அதன் காரணமாக அவரால் கதையில் கவனம் செலுத்த முடிவதில்லை என்ற பேச்சுக்களும் அடிப்பட்டன.

கௌதம் மேனனின் பழைய ஃபார்ம்

இதற்கிடையே வேல்ஸ் நிறுவனம் கௌதம் மேனனுக்கு கை கொடுக்க அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கௌதம் தற்போது சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ’அக்னி குஞ்சொன்று கண்டேன்’ கதையை தழுவி எடுக்கப்படுகிறது.

கௌதமுடன் சிவகார்த்திகேயன்

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பிறகு கௌதம் மேனன் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையும் வேல்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும், சிவகார்த்திகேயனுக்கு இதற்காக மிகப்பெரிய தொகையை முன்பணமாக வழங்கப்பட்டிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

கால்ஷீட் எப்போது?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள சூழலில், தற்போது அவர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், அட்லியின்உதவியாளர் அசோக் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படங்களை முடித்த பிறகே கௌதம் மேனன் படத்திற்கு கால்ஷீட் வழங்குவார் எனவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.