தியாகராஜன் தயாரிக்கும் பாலிவுட்டில் பெரிய ஹிட்டாகி தேசிய விருதும் பெற்ற அந்ததுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்தை கௌதம் மேனன் இயக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானாவின் கதாபாத்திரத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கயிருக்கிறார். முன்னதாக நடிகர் பிரசாந்த், ஒரு திறமையான பியானோ பிளேயர் என்பதால் படத்தின் கருப்பொருளுக்கு ஏற்ற கதாபாத்திரமாய் அமைவார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் கெளதம் மேனன் அடுத்ததாக டாப் ஸ்டார் பிரசாந்தை வைத்து இயக்கும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.