ETV Bharat / sitara

கிடார் கம்பியின் மேலே மீண்டும் கௌதம் மேனன் - கௌதம் மேனன்

சூர்யாவை வைத்து இயக்கிய வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நாயகன் சூர்யாவின் கையில் காப்புடன் கிடாரும் இடம்பிடித்தது.

dsa
dfsa
author img

By

Published : Jul 5, 2021, 5:07 PM IST

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் கௌதம் மேனன் ஒருவர். மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இவர், மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா ஆகியோரின் தயாரிப்பில் ஓடிடிக்காக உருவாகியிருக்கும் நவரசா ஆந்தாலஜியில் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்திற்கு “கிடார் கம்பி மேலே நின்று” என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

கிடாரும், கௌதமும்:

கௌதம் மேனன் அறிமுகமான காலங்களில் அவரது படங்களில் நாயகனின் கையில் காப்பு மட்டுமே இருந்தது. ஆனால், அவர் சூர்யாவை வைத்து இயக்கிய வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நாயகன் சூர்யாவின் கையில் காப்புடன் கிடாரும் இடம்பிடித்தது.

அப்படம் வெளியான சமயத்தில், பெரும்பான்மையான காதலர்கள் கிடார் வாங்குவதையும், வாசிப்பதையும் பெருமையாக கருதும் அளவு கிடாரின் தாக்கம் எழுந்தது.

dfsa

வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கிய திரைப்படங்களில் கிடாருக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படாமல் இருந்தது.

மீண்டும் கிடார்:

இந்த சூழலில் நவரசா ஆந்தாலஜியில் அவரும் சூர்யாவும் இணையும் படத்துக்கு தலைப்பே கிடார் கம்பியின் மேலே என்று இருப்பதால் நிச்சயம் இப்படத்தில் கிடாருக்கு முக்கியத்துவம் இருக்குமென கௌதமின் ரசிகர்கள் கருதுகின்றனர்.

dfsa

38 நிமிடங்கள் ஓடும் இந்த கிடாரில் மொத்தம் 7 பாடல்கள் இருக்குமென தகவல் வெளியாகியுள்ளதால் இப்படம் இசைக்கு முக்கியத்துவம் உள்ளதாகத்தான் இருக்குமெனவும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

அதேசமயம், கிடார் கம்பியின் மேலே மீண்டும் ஏறியிருக்கும் கௌதம் மேனன் ஃப்ரெஷ் ஐடியாவோடு வந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்பதற்கான பதில் ஆகஸ்ட்டில் தெரிந்துவிடும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.