ETV Bharat / sitara

திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா - எடியூரப்பா நடிக்கும் திரைப்படம்

கன்னடத்தில் உருவாகும் ‘தனுஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா திரையுலகில் அறிமுகமாகிறார்.

முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா
முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா
author img

By

Published : Feb 20, 2022, 8:12 PM IST

பெங்களூரு: பல அரசியல் பிரபலங்கள் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். அந்தப் பட்டியலில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கன்னடத் திரையுலகில் அடியெடுத்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ’தனுஜா’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குநர் ஹரிஷ் எம்.டி. ஹல்லி இயக்கி வருகிறார்.

உண்மை சம்பவத்தை தழுவி படம்

எடியூரப்பா கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் ‘தனுஜா’ எனும் மாணவி NEET தேர்வினை கரோனா காலகட்டத்தில் எழுத முடியாமல் சிரமப்பட்டார். பத்திரிகையாளர்களான விஸ்வேஷ்வர பட் மற்றும் பிரதீப் ஈஸ்வர் அந்த மாணவிக்கு NEET தேர்வினை எழுத உதவி செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவனிப்பைப் பெற்றது.

திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா

இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இத்திரைப்படத்தில் எடியுரப்பா முதலமைச்சராகவே நடிக்கவிருக்கிறார். 'Beyond visions cinemas' பேனரில் படம் தயாரிக்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் பத்திரிகையாளர் விஸ்வேஷ்வர பட், டாக்டர்.கெ.சுதாகர், நடிகை தாரா அனுராதா ஆகியோர் நடிக்கயிருக்கின்றனர்.

இதையும் படிங்க:Thalaivar 170: ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் இவரா...?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.