சென்னை: விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்ஐஆர் படத்தின் பயணம் என்ற முதல் பாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால் தற்போது அறிமுக இயக்குநர் மது ஆனந்த் இயக்கத்தில் எப்ஐஆர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சிமா மோகன், ரைசா, ரெபா மோனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் கவுதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அஸ்வத் இசையில் பயணம் என்ற முதல் பாடல் வரும் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘ராட்சசன்’ படத்துக்கு பிறகு விஷ்ணு விஷாலின் இந்தப் படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லிங்குசாமி படப்பிடிப்பை பார்வையிட்ட இயக்குநர் ஷங்கர்!