எட்டு தோட்டாக்கள் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குநர் ஶ்ரீகணேஷ். அவர் தற்போது அதர்வா- பிரியா பவானி சங்கரை ஜோடியாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
ராக்போர்ட் இன்டர்நேஷனல் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு குருதி ஆட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 8ஆம் தேதியும், டீசர் வரும் 11ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.